துடியலூர் August 13 2018 : கோயமுத்தூர் துடியலூர் அருகே உயிர் சக்தி யோகா மையம் இயங்கி வருகிறது அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்காப்புக் கலை பயின்று வருகின்றனர் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்றுத் தருவதால் மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர் .
இந்த யோக மையத்தில் பயின்ற மாணவர்கள் மாவட்டத்தில் பல பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர் .21 நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்றனர்.
மஞ்சள், பச்சை ஆரஞ்சு பெல்ட்க்கான போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பெல்ட் வழங்கப்பட்டது இந்த மையத்தின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் திரு ஆர் வி ஆனந்த் குமார் என்கின்ற Anndlee பெல்ட்டுகளை வழங்கினார் இதில் ஓய்வுபெற்ற உதவி காவல்துறை ஆய்வாளர் திரு ஜார்ஜ் பள்ளி ஆசிரியர் திரு அருள் ஞானசீலன் மற்றும் ஜெரினா ஸ்டெல்லா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்
பயிற்சி பெற்ற மாணவன் சஞ்சய் சேசாங் கூறுகையில் இந்த தற்காப்புக்கலை மன அமைதி அதிகரிக்க பயன்படுகிறது என தெரிவித்தார் இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.












