பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

0
570

Ooty 26 August 2018 :நீலகிரி மாவட்டம் உதகை தேனிலவு படகு இல்லத்தில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்து கூறியதாவது,
பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் 23.08.2018 அன்று தொடங்கி வைத்தார்.தமிழ்நாட்டில் 01.01.2019 முதல் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களான, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பத்தொன்பது வகையான பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் மற்றும் விற்பனை செய்யவும் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படும் என்று சட்ட பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முக்கியமாக நீர் நிலைகளில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி தூய்மைபடுத்தும் பணியினை நடத்த வேண்டுமென்ற தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க இன்று முதற்கட்டமாக தேனிலவு படகு இல்லம் மற்றும் கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் விழிப்புணர்வு முகாமின் மூலம் தேனிலவு படகு இல்லம் மற்றும் கரை பகுதிகளில் கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. விரைவில் நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்கான எல்லாவித நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மாணவ, மாணவியர்கள், சுற்றுலா பயணிகளிடையே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு துண்டு பிரசுரம் மற்றும் துணிப்பைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி.நளினி, நகராட்சி ஆணையாளர் (பொ) திரு.ரவி, சுற்றுலா அலுவலர் திரு.ராஜன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.கோபாலகிருஷ்ணன், அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.-Nilgiri News

LEAVE A REPLY