
தெலுங்கானா 11 September 2018 : 86 பயணிகளுடன் சனிவாரம்பேட்டா இருந்து ஜகித்தியால் நோக்கி சென்று கொண்டிருந்த தெலுங்கானா அரசு பேருந்து .ஜகித்தியால் அருகே வந்தபோது இரும்புத் தடுப்பை உடைத்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 53 பேர் பலியானார்கள், காயமடைந்தவர்களை கரீம்நகர் மற்றும் ஜகித்தியால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் ,60 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய இந்த பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதிக வேகத்தில் இந்த பேருந்து வந்ததாக விபத்தில் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.











