150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா உதகையில் நடைபெற்றது

0
686
150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா உதகையில் நடைபெற்றது

Ooty 17 September 2018 : நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா இன்று உதகையில் நடைபெற்றது. நீலகிரி 150-வது ஆண்டை குறிக்கும் வகையில் logo மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வெளியிட்டார்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்மா இருசக்கர வாகனத்தினை பழங்குடியின பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர்கள் திரு.கே.ஆர்.அர்ஜூணன், திரு.எ.கே.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.கோபாலகிருஷ்ணன் , குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.சாந்திராமு , தலைவர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் இணையம்திரு.அ.மில்லர்,தமிழ்நாடு மேற்கு மண்டல அஞ்சலக தலைவர் திரு.அம்ரேஸ்யுப்மன்யூ , தலைமை வன பாதுகாவலர் அலுவலர்(கோவைகோட்டம்)திரு.தீபக்ஶ்ரீவஸ்தவா,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ.சண்முகப்ரியா ,மாவட்ட வன அலுவலர் (நீலகிரி கோட்டம்) திரு.சுமேஷ்சோமன்,மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.செல்வராஜ் , அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.- Nilgiri News

LEAVE A REPLY