Coonoor 07 September 2018 : குன்னூர் மாடல் அவுஸ் பகுதியில் பல நாட்களாக தண்ணீர் சப்ளை செய்யப் படாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் குடிநீர் சப்ளை துவங்கப்பட்டது தொடர்ந்து 36 மணி நேரமாக குடிநீர் தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது இதனால் அப்பகுதி மக்கள் குடி நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குடிநீர் சப்ளையை நிறுத்தி பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு பிறகே அப்பகுதியில் மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் .இதனைத் தவிர்க்க நான்கு நாட்களுக்கு ஒருமுறையாவது 8 மணிநேரம் முறையான குடிநீர் வழங்கினால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவார்கள் என குன்னூர் மாடல் அவுஸ் மக்கள் தெரிவித்தனர்.-Nilgiri News












