
Coonoor 05 October 2018 :பள்ளிக்கல்வித் துறை சார்பாக ஈவது விலக்கே நாள் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் உள்ள என் எஸ் ஐயா நினைவு மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது .பள்ளி மாணவ மாணவிகளிடையே உதவும் மனப்பான்மையை அதிகரிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் இருக்கும் சுமார் 15 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பழம் ,காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை பள்ளி மாணவ மாணவிகள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிறப்பாக செய்திருந்தார்– Nilgiri News











