Ooty 08 October 2018 :உதகை குன்னூர் சாலையில் இன்று மாலை 4:30 மணியளவில் எல்லநள்ளியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே இராட்சத மரம் சாலையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம் மேல் விழுந்தது. பிக்கப் வாகனம்தின் முன்புறம் மரம் விழுந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை .இதனால் இந்த சாலையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர் .ஒரு சில வாகனங்கள் ஓல்ட் அருவங்காடு வழியாக திருப்பி விடப்பட்டது.– Nilgiri News