நேஷனல் அஜெண்டா ஃபோரம் (NAF) என்ற ஒரு இணைய புரட்சி

0
727

New Delhi 04 September 2018 : நேஷனல் அஜெண்டா ஃபோரம் (NAF) என்ற ஒரு இணைய புரட்சி, இந்தியன் பொலிடிகல் ஆக்சன் கமிட்டி (I-PAC) மூலம் ஜூன் 29 தொடங்கப்பட்டு தேசிய அளவில் பிரபலமான சமூக அமைப்புகள் மற்றும் 350கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் பேறாதவரோடு செயல்பட்டு இன்று இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த NAF என்பது இந்திய மக்களுக்கு தங்களின் முக்கிய மற்றும் பிரதானமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு தளமாக செயல்பட்டது என்பது குறிப்பிட தக்கது. இதில் மேலும் குடிமகன்கள் தங்களது கோரிக்கைகளை வழிநடத்த உகந்த தலைவரை அந்த இணைய வழி மூலமாக தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டது. மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த ஆண்டினை அவர் சொல்லிவிட்டு சென்ற இந்தியாவின் முன் உரிமைகளை மறுபரிசீலனை செய்யும் பட்சத்தில் இந்த NAF- National Agenda Forum ஆனது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய வழி தேர்தலை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்தியன் பொலிடிகல் ஆக்சன் கமிட்டியின் 1 லட்சம் பார்ட் டைம் அசோசியேட் (PTA’s) செயல் வீரர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இதனை பற்றிய விழிப்புணர்வை மேற்கொண்டனர்.
தற்பொழுது இந்த இணைய புரட்சியில் 57 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது சிந்தனை மற்றும் நாட்டின் மீது பற்று கொண்ட மக்கள் பங்கெடுத்து தங்களது வாக்கினை பதிவிட்டுள்ளர்கள். மேலும் வளமான இந்தியாவின் முக்கிய எதிர்பார்ப்புகளையும் மக்கள் வாக்களித்துள்ளனர். அதில் முதன்மையாக பெண்கள் பாதுகாப்பு மற்றும் சம உரிமை, விவாயிகளின் நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் கட்டமைப்புகளை வலுபடுத்துதல், கல்வி மேம்பாடு, குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்தல், மத நல்லிணக்கம், கிராம வளர்ச்சி போன்றவை இடம்பெற்றுள்ளது.
Nilgiri News

LEAVE A REPLY